(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நானூற்றி ஜம்பத்தாறு பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி இன்று (18) 03வது நாளாக ஆளுநர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டும் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர்கள் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டிருந்தும் இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டமானது தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்டுமெனவும் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநரே தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தாமதிக்காமல் உடனடியாக நியமனத்தை வழங்கு என்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment