க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்




கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. 

அடுத்த மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும். 

பரீட்சைக்கான கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். 

இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். 

இம்முறை பரீட்சையில் மூன்று வினாத்தாள்களுக்காக வினாக்களை வாசித்து புரிந்து கொள்வதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)