(அப்துல்சலாம் யாசீம்)
96வது சர்வதேச கூட்டுறவு தினம் எதிர்வரும் 07ம் திகதி #மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
"நிலைபேறான பொருற்கள் சேவைகளின் உற்பத்தியும் நுகர்வும்" எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது.
இலங்கை கூட்டுறவாளர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலின் கீழ் கைத்தொழில் மற்றும் வணிக பிரதி அமைச்சர் புத்திக பத்திறண அவர்களுடன் இணைந்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ஆர்.அசோக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக்கைத்தொழில் அமைச்சர் தயாகமகே இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணைாயளர் எஸ்.எல்.நஸீர். இலங்கை தேசிய கூட்டுறவு சபை தலைவர் டபிள்யூ.லலித் ஏ.பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் கூட்டுறவுத்துறைகளைச்சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு பயனாளிகளும் பற்று பற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment