உத்தரகாண்டில் பஸ் கவிழ்ந்து 47 பேர் பலி




இந்தியா-உத்தர காண்ட் மாநிலம், பவுரி கர்வாலா மாவட்டத்தில் உள்ள நனிதன்டா பகுதியில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ், பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 47 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டன.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.