யாழ்.செல்வச்சந்நதியிலிருந்து கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகிய வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் இன்று(1) 45வது நாளில் பாணமை பிள்iளார் ஆலயத்தில் தங்கவுள்ளனர்.
நேற்று(30) வெள்ளிக்கிழமை பொத்துவிலுக்குச்சென்ற அவர்களை பொத்துவில் பிரதேசசபையின் உப தவிசாளர் பெருமாள்பார்த்தீபன் வரவேற்று 3வேளை உணவளித்து மெனபனிக்குழம்பும் வழங்கி உபசரித்தார்.
அவர்கள் காட்டுக்குள் செல்லும்போது தேவையான அத்தனை உலருணவுப்பொருட்களையும் பொத்துவிலில் கொள்வனவுசெய்தார்கள். அம்பாறை மாவட்ட மீடியா போரத்தினர் ஒருதொகுதி உலருணவுப்பொருட்களை நேற்று தலைவர் எம்.எ.பகுர்தீன் தலைமையில் கையளித்தனர்.
நாளை(2) திங்கட்கிழமை கிழக்கின்தென்கோடியிலுள்ள உகந்தமலை முருகனாலயத்தைச்சென்றடைவார்கள். அங்கு இருதினங்கள் தங்கியிருந்து காட்டுப்பாதை திறக்கப்படும் 4ஆம் திகதி அதிகாலை காட்டுக்குள் முதன்முதலாகப் பிரவேசிப்பார்கள்.
வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் 7மாவட்டங்களையும் இணைத்து 54நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து இடம்பெறும் இப்பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படு கின்றது.
கடந்த 45தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய 5 மாவட்டங்களைக்கடந்து தற்போது அம்பாறை மாவட்ட எல்லையில் நின்றுகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் யுலை 13ஆம் திகதி அதிகாலை செல்லக்கதிர்காமத்தைச் சென்றடைவார்கள்.
கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவம் யூலை13இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28இல் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment