ரஷ்யாவில் நடந்துவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து அர்ஜென்டினா அணி இரண்டாம் சுற்றில் வெளியேறியது.
இன்று நடந்த நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஹியூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப்போட்டியில் நான்குக்கு மூன்று என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. இதன்மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி மீது அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த ஆட்டம், கிலியனை என்றுமே நினைவில் வைத்திருக்கும் ஆட்டமாக அமைந்துவிட்டது.
19 வயதான கால்பந்து விளையாட்டு வீரரான கிலியன் டபாப்பே சிறப்பாக விளையாடி, 2 கோல்கள் அடித்து, பிரான்ஸின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
19 வயதான கால்பந்து விளையாட்டு வீரரான கிலியன் டபாப்பே சிறப்பாக விளையாடி, 2 கோல்கள் அடித்து, பிரான்ஸின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
1978 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது.
1998இல் பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது. அப்போது உலகக்கோப்பை போட்டிகள் பிரான்சில்தான் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment