(க.கிஷாந்தன்)
அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 189வது வருடாந்த திருவிழா 15.07.2018 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டன் பங்கு தந்தை லெஸ்லீ பெரேரா தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
15.07.2018 திருப்பலி பூசையின் பின் புனித அன்னம்மாளின் திருச்சுரூப ஊர்வலம் ஆலயத்தில் இருந்து அட்டன் பிரதான பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் அட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று ஆலயத்தை வந்தடைந்தது.
காலை 7.30 மணிக்கு சிங்களம், தமிழ் இருமொழிகளிலும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. அதன்பின் 10.30 மணியளவில் விசேட திருப்பலியும் நடைபெற்றது. இதில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.
Post a Comment
Post a Comment