(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் 11 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை இம்மாதம் 11ம்திகதி வரை விளக்கமறயிலில் வைக்குமாறு இன்று (02) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குச்சவௌி,கும்புறுபிட்டி,நாவற் சோலையைச்சேர்ந்த நாகநாதன் நவநீதராஜன் (26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2010ம் ஆண்டு இத்தாலி நாட்டைச்சேர்ந்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்நபருக்கு முதல் தடவையாக திருகோணமலை நீதிமன்றத்தினால் பிடியயாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இவரை பொலிஸார் 18 வருடங்களாக தேடி வந்த நிலையிலேயே இன்றைய தினம் இரகசிய தகவலையடுத்து அவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வேளை குச்சவௌி பொலிஸாரினால் 11 வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தவை தெரியவந்துள்ளது.
இதில் வீட்டை உடைத்து 20400 ரூபாய் பணமும் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகையும் திருடப்பட்டுள்ளதாகவும்,வௌிநாட் டு பெண்ணிடமிருந்து 20000ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி கொள்ளையடிக்கப்ட்டதாகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
அத்துடன் பயமுறுத்தி பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, குச்சவௌி பிரதேசத்தில் இரவு நேரத்தில் வீட்டை உடைத்தமை,440 ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியமை, 50000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு பசு மாடுகளை திருடியமை, ஒரு காணிக்குள் அனுமதியின்றி சென்று 20 கோழிகளை திருடியமை, EPGV 3859 எனும் இலக்கமுடைய முற்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த 6500ரூபாய் பெறுமதியான பெற்றியை திருடியமை, 120000ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை கொள்ளையிட்டமை மற்றும் கோபாலபுரம் கள்ளு கடையொன்றினை உடைத்து மூவாயிரம் ரூபாய் பணத்தை திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களே இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment