தீயில் சிக்கியுள்ள 10 பே​ரை மீட்க நடவடிக்கை




அல்துமுல்ல காட்டில் பரவியுள்ள  தீயில் 10 பேர் சிக்கியுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தீ பரவி வருவதனால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியிலும், தீயில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றும் முயற்சியிலும், தியத்தலாவ இராணுவ  முகாமில் உள்ள இராணுவத்தினர் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.