#GalaxyS10 அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும்




அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி எஸ்10
புதுடெல்லி:

சாம்சங் நிறுவனத்தின் சவுன்ட்-எமிட்டிங் டிஸ்ப்ளே கான்செப்ட் கடந்த மாதம் நடைபெற்ற தகவல் டிஸ்ப்ளேக்களுக்கான (SID 2018) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த டிஸ்ப்ளே வைப்ரேஷன் மற்றும் போன் கன்டக்ஷன் பயன்படுத்தி இயர்பீஸ்-க்கான தேவையை போக்குகிறது. இதனால் டிஸ்ப்ளேவில் ஸ்கிரீன் அளவு மேலும் அதிகரிக்க முடியும். சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள்  தங்களது சவுன்ட் எமிட்டிங் OLED டிஸ்ப்ளேக்களை வணிகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேவை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.



இதன் வைப்ரேஷன் இருப்பதால், சத்தத்தை திரையின் பாதி பகுதியில் காதை வைக்க வேண்டும். இது திரையில் வட்ட வடிவ ஐகான் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் விவோ அறிமுகம் செய்திருந்த விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்களில் இதேபோன்ற தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஸ்கிரீன் சவுன்ட் கேஸ்டிங் என அழைக்கிறது. மற்ற பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆடியோ தீர்வுகளை போன்று இல்லாமல், இது மின்சக்தியை சேமித்து, சத்தம் கசிவதை குறைக்கும். இதனால் ஆடியோ தரம் சிறப்பானதாக இருக்கும்.