பொத்துவில்: என்றுதான் தணியும் இந்தத் தாகம்?




எத்தனை முறைதான் இந்த பொத்துவில் மக்கள் அடுத்தவரின் கறிச் சட்டிக்கு கறிவேப்பிலையாக இருப்பது.
****************************--**--***
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பொத்துவில் சார்பாக சிறந்த ஆளுமையுள்ள, பக்கத்து ஊர் ஆதரவு உள்ள, முகவரி தெரிந்த, அரசியல் தெரிந்த, நல்ல அறிவுள்ள,மக்களோடு மக்களாக பழகக் கூடிய,மக்கள் தேவைகளை உணரக் கூடிய அதை நிவர்த்தி செய்யக்கூடிய, நிவர்த்திக்கும் வகையில் பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் அமைச்சர்களை சந்திக்க கூடிய அவர்களால் பெற்றுக் கொள்ளும் சக்தி உடைய நம் சமூகத்திற்கு ஏதும் என்றால் அதை தைரியமாக சபையில் எடுத்துப் பேசும் ஒரு
ஆண் மகனைத்தான் தெரிவு செய்ய வேண்டும்.
அது யாராக அமையலாம் என்ற ஒரு கேள்வி இன்றைய ஒவ்வொரு இளைஞர்களினது உள்ளக் குமுரல்கள் சத்தம் விடத் தொடங்கியிருக்கிறது.

அது தற்போது பல கோணங்களில் காட்சியளிக்கிறது.

இது பற்றி
முகநூல் மற்றும் வட்சப் குழுமங்களில் சில இளைஞர்களுக்கு மத்தியில் பல விவாதங்கள் போய்க் கொண்டிருக்கிறது.

எது எப்படியாயினும் இந்த முகநூல் மற்றும் வடசப் பாராமல் பாவிக்காமல் இது பற்றி தெரியாமல் யாரு எவர் என்றும் தெரியாமல் சின்னங்கள்தான் நம் என்னங்கள் அவர் நம்மட புள்ளடி புள்ளடா என்று வாக்களிக்கும் எத்தனையோ மக்கள் உள்ளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அந்த வகையில் தேர்தல் வெற்றி தோல்வி முடிவுகளை அறிவிப்பவர்களும் அவர்களே ஆவர்.

எனவே இங்கு உண்மைகள் மறைக்கப்படுகின்றது நியாயங்கள் புதைக்கப்படுகின்றது தொடர்ந்தும் பொத்துவில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

வெளியில் இருப்பவர்களை விட யாதும் தெரியாது உள்ளுக்குள் இருப்பவர்களே அதிகம் என்பது மிகையாகாது
கடந்த தேர்தலில் அவர்களை சியாத் ஆகிய நான் வீடு வீடாக சந்தித்து எம் ஏழைகளிடம் சகீதம் பாடினேன்
அது என் நடைப்பயணத்திற்கு வெற்றி சூடியது
ஆகையால் அதே பயணத்தை மீண்டும் தொடர எத்தனித்துள்ளேன்
ஒரு தேடலுக்காக வேண்டி

எது எப்படியாயின் எந்த கட்சி எந்த வேட்பாளர் எனும் முடிவுகள் சரியாக எடுக்கப்படாத சந்தர்பத்தில் தேர்தல் முடிவுகள் எங்கள் திட்டப்படி மக்கள் முடிவுகளாக சரியான முடிவெடுக்கும் அது சிறந்த முடிவாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அந்த யுத்திகளை நாங்கள் கையாள தயாராக உள்ளோம்.

மக்களை மாயமாக்கி மயக்கும் தந்திரம் அவர்களிடம் இருந்தால்
அதனை விழிப்படைய செய்து தட்டி எழுப்பும் எந்திரம் எங்களிடம் உண்டு.
எத்தனை முறைதான் இந்த பொத்துவில் மக்கள் அடுத்தவரின் கறிச் சட்டிக்கு கறிவேப்பிலையாக இருப்பது.
By சியாத