இலங்கையில் தமிழ் மொழி ஒலிபரப்பாளர் ஒருவரால் வெளியிடப்படுகின்ற,செய்திக் கலை தொடர்பான வழிகாட்டல் நூல், தலைநகருக்கு அப்பால் வெளியிடப்படும் முதல் சந்தர்ப்பம்,அக்கரைப்பற்று மகுடத்தில் மற்றுமொரு மாணிக்மாகும்.
இலங்கைத் தொலைக்காட்சியின் முதல் செய்தி அறிவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்த ின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் சொல்லும் செய்திகள்' எனும் நூல் அறிமுக விழா 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.30க்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள மென்கோ கார்டன் உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிறை எப்.எம். சந்தைப்படுத்தல் முகாமையாளர், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் எஸ்.ரபீக், பிறை எம்.எம். கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளார்கள்.இந் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கவுள்ளதுடன், ஊடகத்துறைசார் மாணவர்கள், கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Post a Comment
Post a Comment