(அப்துல்சலாம் யாசீம்)
மக்களுக்கு சேவை செய்வதற்கு பட்டம் பதவிகள் தேவையில்லை என திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் வௌ்ளத்தம்பி சுரேஷ்குமார் தெரிவித்தார்.
கப்பல்துறை பிரதான வீதி புனரமைப்பு பணிகளை இன்று (27) ஆரம்பித்து வைத்து மக்களுடன் கலந்துறையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கப்பல்துறை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி பல வருடகாலமாக திருத்தப்படாமல் இருப்பதாக அப்பகுதியிலுள்ள இளைஞர் அமைப்புக்களின் ஊடாக கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அக்கடிதத்தின் மூலம் கப்பல் துறை கிராமத்தின் பல குறைபாடுகளை அறிந்து கொண்டதாகவும் தான் தற்போது அரசியலில் பதவிகள் ஏதும் வகிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் "இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள்" அவர்கள் தனக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திய குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும் என்ற நோக்குடனும் இலங்கை தமிழரசு கட்சி விடுத்த பணிப்புரைக்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து இவ்வீதியினை புனரமைத்து தருவதாகவும் இதன் போது அவர் குறிப்பிட்டார்.
கப்பல்துறை கிராமத்தின் குறைபாடுகள் பல காணப்படுகின்ற போதிலும் பல வருடங்களாக யாரும் கவனிக்காத நிலையில் காணப்பட்ட இவ்வீதியினை புனரமைத்து தந்த திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் உபதலைவர் வௌ்ளத்தம்பி சுரேஷ்குமாருக்கு அப்பகுதியிலுள்ள மக்கள் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
அத்துடன் அரசியலில் பதவி வகிக்காமல் தங்கள் கடிதத்திற்கு மதிப்பளித்த இவருக்கு இளைஞர் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் இளைஞர் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment