சிறுத்தையைக் கொன்றோர் சிறை செல்கின்றனர்.




சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த இருவரையும் இன்று (24) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் சிறுத்தையை கொலை செய்த ஏனைய நபர்களையும் கைது செய்யமாறு பொலிஸாரிற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




(முந்தைய செய்தி)
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று (23) இரவு அம்பாள்குளம் பகுதியில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளதுடன் இன்று (24) காலை மற்றுமொருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.