ஞானசாரருக்கு வழங்கிய தீர்ப்பால் திருப்தி




குடிமக்களின் கடமை சட்டத்தை வலுப்படுத்துவதாகவும் அந்த வகையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தாம்  திருப்தி அடைவதாக, சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய சம்பவம்​ தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (14) வழங்கப்பட்டதன் பின்னரே சந்தியா எக்னெலிகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.