விபத்தில் மாணவன் பலி




(அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவ்பொத்தான  மரதன்கடவெல பகுதியில் இடம் பெற்ற விபத்துடன் தொடர்புடைய சாரதியை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (27) கெப்பித்திகொள்ளாவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் வவுனியா, மகா இறம்பைக்குளம் ஜந்தாம் குருக்குத்தெருவைச்சேர்ந்த வசந்த ராஜா பவித்ரன் (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 திருகோணமலை ஏ 12 பிரதான வீதி ஹொரவ்பொத்தான மரதங்கடவெல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் பின் புரமாக பயணித்தவரே படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



விபத்தில் படுகாயமடைந்த கபுகொள்ளாவ துனுவத்தேகம பகுதியைச்சேர்ந்த  பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவனான ஹசித டில்சான் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.