நடிகர் அரவிந்த் சாமி,கொழும்பிற்குவந்த போது




இலங்கைக்கு வந்த போது தனக்கு நேர்ந்த அவமானம் தொடர்பில் தற்பொழுது நடிகர் அரவிந்த் சாமி மனம் திறந்துள்ளார்.
தான் கொழும்பிற்கு குடும்பத்துடன் சுற்றலா வந்த போது, ரசிகர் ஒருவர் தனது எடையை பார்த்து கிண்டலாகப் பேசியதால் குடும்பத்தின் முன் தான் அவமானப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் அரவிந்த்சாமி சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்ததில் உடல் எடை கூடியதுடன், தொப்பையும் அவருக்கு போட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் தனது குடும்பத்துடன் கொழும்புக்குச் சுற்றுலா வந்திருந்த போது உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது, அரவிந்த்சாமி மகளிடம் நபரொருவர் “உங்கள் அப்பாவை கொஞ்சமாகச் சாப்பிட சொல்லு” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவத்தால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லாத போதும் என்னுடைய மகள் சிறியவள். அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதே எனக்கு வருத்தத்தையளித்தது.
அந்த சம்பவத்தை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என்று வருத்ததுடன் கூறியுள்ளார் அரவிந்த்சாமி

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.