நீதிமன்ற உத்தரவையும் மீறி சீனப் பிரஜை கட்டியுள்ள ஹோட்டல்




கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், அந்தக் கட்டளையை மீறி கொழும்பு - 07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையில் சீன வர்த்தகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றை கட்டியுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

கொழும்பு -07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையை அண்மித்த பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படுகின்ற அதிக சத்தம் மற்றும் தூசி எழும்புவது சம்பந்தமாக பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை என்பவற்றுக்கு அறிவிக்காமல் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்த ஹோட்டல் வௌிநாட்டவர்களுக்காக மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.