பாகிஸ்தான் பிரஜை விமானத்தில் மரணம்




பறந்துகொண்டிருந்த விமானத்தில் மரணமடைந்த பாகிஸ்தான் பிரஜையின் சடலம், நீர்​கொழும்பு வைத்திசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சிங்கபூர் ஷெங்கி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த யு.எல் 306 என்ற விமானத்தில் பயணித்துகொண்டிருந்த பாகிஸ்தான் பி​ரஜையான, நிஷா அலிமுன் (வயது 86) என்ற பெண்ணே, மரணமடைந்துள்ளார்.
சிங்கபூர் நேரப்படி, 23 ஆம் திகதி காலை 7:30க்கு அவர் மரணமடைந்துள்ளார் என்று  தெரிவித்துள்ள, பொலிஸ் தலைமையகம், பிரேத பரிசோதனை இன்று (24) மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.