விபத்து - இருவர் காயம்




(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகரப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மற்றுமொரு முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் 28.06.2018 அன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வூட்டன் பகுதியில் வீதியில் மறு திசையில் திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட வேனுடன் மோதுண்டுள்ளது.
அதிக வேகமும், சாரதியின் கவனயீனமும் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.