எம்.எஸ்.எம். ஹனீபா
அதிதீவிரமாகப் பரவிவரும் புதுவகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடம் மறு அறிவித்தல் வரும்வரை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதென, தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று (13) தெரிவித்தார்.
இப்பீடத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், கடந்த திங்கட்கிழமை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், பல்கலைக்கழக மருத்துவமனையில் 30க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
இவை, மேலும் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்திற்கொண்டு தொழில்நுட்பபீடத்தை மறு அறிவித்தல் வரும்வரை மூடி, மாணவர்களைத் தத்தமது வீடுகளுக்குச் செல்லுமாறும், தொழில்நுட்பபீடம் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment