விபத்தில் வெளிநாட்டவர் பலி




வெல்லவாய - எல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (26) காலை 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் 78 வயதுடைய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வெளிநாட்டவர்கள் குழு ஒன்று பயணித்த பேருந்து எல்ல வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பிரான்ஸ் நாட்டவர் புகைப்படம் பிடிப்பதற்காக பாதையை கடக்க முற்பட்ட வேளையில் வெல்லவாயவில் இருந்து எல்ல நோக்கி பயணித்த பேருந்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.