(அப்துல்சலாம் யாசீம்)
ஏறாவூர் ஸகாத் கிராமத்திற்கு அல்-கிம்மா நிறுவனத்தினால் இலவச குடிநீர் இணைப்பு.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் 'செமட்ட செவண' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் மீராகேணியில் நிர்மாணிக்கப்பட்ட 'ஸம் ஸம்' கிராமம் மற்றும் 'ஸகாத்' கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு அல் கிம்மா நிறுவனம் இலவச குடி நீர் இணைப்பினை வழங்கியது.
இக்கிராமம் (28) இன்று வியாழக்கிழமை
பயனாளிகளுக்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்
சஜித் பிரேமதாசவினால் பூர்வமாக கையளிக்கப்பட்டது.
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஷாஹிர் மௌலானா, கடற்றொழில் நீரியல்வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, ஆகியோருடன் அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் வேண்டுகோளுக்கமைய அல்-கிம்மா நிறுவனமானது ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் காமாட்சி மாதிரிக் கிராமம் 1,2 மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் முல்லை நகர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் கொக்குவில் 1 ஆகிய கிராமங்களுக்கும் குடி நீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment