அரிசிமலை புனித பூமிக்குரிய காணியை உடனடியாக ஒதுக்குக!




(அப்துல்சலாம் யாசீம் )

புல்மோட்டை  அரிசிமலை புனித பூமிக்குறிய காணியை உடனடியாக அடையாளம் கண்டு ஒதுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம  பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை அரிசிமலை  புராதன விகாரைக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் அடங்கிய பிரதேசத்தை அடையாளங்காணலும் அவ்விகாரைக்குறிய காணிகளை அடையாளப்படுத்தி நில அளவை செய்தல் தொடர்பான விஷேட கூட்டம் கடந்த வௌ்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.


அக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் இப்பணிப்புரையை விடுத்தார்.

அத்துடன் இக்கலந்துறையாடலின் போது அப்பிரதேசத்தில் 
குடியிருக்கின்ற மக்களுக்கு எதுவித  பாதிப்புக்களும் வராத விதத்தில் அரிசிமலை விகாரையின் புனித பூமிக்குறிய காணிகளை தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரனையுடன் எல்லைக்கல் இட்டு அதனை நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யுமாறும் பணித்துள்ளார்.


இக்கலந்துறையாடலின் போது மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார   மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஷ சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் திரு.ஜனாப் மற்றும் குச்சவௌி பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்