மானிப்பாய், வீடொன்றின் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்




யாழ்ப்பாணம், மானிப்பாய், லோட்டன் வீதியின் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீடொன்றின் மீது இன்று (28) காலை பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் வாள்வெட்டு தாக்குதல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது. 

10 பேர் கொண்ட குழு ஒன்று குறித்த வீட்டிற்கு வந்து வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, வீட்டில் இருந்த மோட்டர் சைக்கிளிற்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களை அடித்து நெருக்கி, வீட்டின் குடும்பத் தலைவரையும் வாளால் வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த குடும்பத் தலைவரின் மகன், ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு பழி தீர்க்கும் வகையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(யாழ். நிருபர் பிரதீபன்)