மாடுகளைத் திருடியோருக்கு விளக்க மறியல்




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மூன்று  மாடுகளை திருடி  பியாஜோ முற்சக்கர வண்டியில் கால்களை  ஒன்றோடொன்று பிணைத்து கொண்டு சென்ற இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (14) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நிலாவௌி ,இக்பால் நகர் பகுதியைச்சேர்ந்த 37 வயது,39வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 


குச்சவௌி பிரதேசத்திலிருந்து நிலாவௌி பகுதிக்கு  பியாஜோ முற்சக்கர வண்டியில் மாடுகளை திருடி கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் முற்சக்கர வண்டியுடன் சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டார்.

இதேவேளை தொடர்ந்தும் குச்சவௌி பிரதேசத்தில் மாடுகளை திருடுவதாக  மாட்டு உரிமையாளர்கள் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறான குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறான சுற்றுவளைப்புக்களை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.