எம்.எல்.எஸ்.டீன்
பொத்துவில், அறுகம்பை கடலுக்கு கடந்த 02ஆம் திகதி மீன்பிடிப்பதற்கு சென்ற பொத்துவில் சிங்கபுரவைச் சேர்ந்த ஜே.பி.எல்.சந்ஜீவ, டபிள்யூ.டிலும் சதுரங்க, டி.வி.மதுசங்க பத்மசிறி ஆகிய மீனவர்கள் 12 நாட்களாகியும் இன்னும் கரை திரும்பவில்லை.
இவர்களைத் தேடும் பணிகள் கடந்த 12 நாட்களாக கடற்படை, வான்படை மற்றும் மீனவர்களின் மூலம் இடம்பெற்றுவருகின்றன.அம்மீனவர்கள் பற்றிய தகவல்கள் அறியப்படவில்லையென பொத்துவில் உல்லை பிரதேச மீன்பிடி பரிசோதகர் எம்.எஸ்.மனாசிர் சரீப் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment