பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மஹேஸ் நிசங்க தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கடவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மஹர நீதிமன்றில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபரை 13/6 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
எந்தரமுல்லையில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கத்துக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் ஏற்பட்ட மோதலில், உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மஹேஸ் நிசங்கவும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள கடவத்தை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment
Post a Comment