நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் போலி நாணத்தாள்கள் மற்றும் ஹெரோயின்




தம்புத்தேகம, இரண்டாம் பிரிவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி நாணத்தாள்கள் மற்றும் ஹெரோயின் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அப்பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் நிறுத்த வைக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, தம்புத்தேகம பொலிஸார் அப்பகுதியை சோதனையிட்டனர். 

இதன்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்து 42 போலி 500 ரூபா நாணத்தாள்கள் மற்றும் 300 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.