நேருக்கு நேர்




கொழும்பு குருநாகல் பிரதான வீதியின், அலவ்வ பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி  சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளன.
கல்நெவ பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸூடன், கொழும்பிலிருந்து கதுருவெல பிரதேசம் நோக்கிப் பயணித்த பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், பொல்காவெல மற்றும் அலவ்வ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன