(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி இறக்கக்கண்டி பாலத்திற்கருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இன்று (14) வியாழக்கிழமை முற்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு .ஏறாவூர் பகுதியைச்சேர்ந்த ஹயாத்து முகம்மது மகீன் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பகுதியிலிருந்து புல்மோட்டை பிரதேசத்திற்கு ஹயர் வந்த முற்சக்கர வண்டி சாரதியான இவர் இரவு அங்கு தங்கிவிட்டு இன்று காலை வீட்டுக்கு செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முற்சக்கர வண்டியில் பயணித்த மற்றையவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது நிலாவௌி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment