மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (28) நடைபெற்ற விஷேட கலந்துரையாடலை தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்த பின்பு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் மாகாணசபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Post a Comment
Post a Comment