திருவிழாவில் தீ




மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீப்பந்து சுழற்றியபோது அதில் இருந்து நெருப்பு பக்தர்கள் மீது வீழ்ந்ததில்; 20 பேர் படுகாயமடைந்த ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளனர். 

உன்னிச்சை பிரதேசத்தில் நேற்று (23) இரவு 11 மணியவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மட்டு. ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 7 ம் கட்டை மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்றது . 

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் அம்மன் வீதி உலாவரும்போது அதற்கு முன்னாள் பக்தர் ஒருவர் சுழற்றி கொண்டிருந்த தீப்பந்தில் இருந்து திடீரென நெருப்பு பக்தர்கள் மேல் வீழ்ந்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து பக்தர்கள் சிதறி பயத்தில் ஓடியதுடன் தீப்பற்றியவர்களின் உடைகளை கழற்றி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததுள்ளனர். 

படுகாயமடைந்த சிறுவர்கள் உட்பட 20 பேரையும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் படுகாயமடைந்த 2 பேரை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

(அம்பாறை நிருபர் சரவணன்)