சர்வதேசப் பிறையின் அடிப்படையில், இலங்கையின் சில இடங்களில் பெருநாள்




சர்வதேசப் பிறையின் அடிப்படையில் இலங்கையின் பல்வேறு இடங்களில், நோன்புப் பெருநாள் தொழுகை இடம் பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று,பாலமுனை, காத்தான்குடி, மன்னார், அக்குறணை. கொழும்பு பேன்ற இடங்களில் சிலர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்ய அமைப்பின் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று (15) வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.
தாருல் அதரின் பிரச்சாரகர் மெளலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி) பெருநாள் தொழுகையை நடாத்தி பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் அயல் கிராமங்களில் இருந்தும் பலரும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.