அரசாங்கத்தை மாத்திரமல்லாது அரச தலைவர்களையும் விமர்ச்சிக்கக்கூடிய சுதந்திரம் இன்று நாட்டிலிருப்பதாக கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் - இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிபிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் "மக்களுக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றி, ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் நிலைநாட்ட அரசாங்கத்தால் முடிந்துள்ளது." என்றார்
"முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தையோ, அரச தலைவர்களையோ விமர்ச்சித்தவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்கள். இந்த நிலமை இன்று இல்லை." என அமைச்சர் கூறினார்.
Post a Comment
Post a Comment