-ஏ.சாந்தஉதய-
சப்ரகமுவ மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், சாதாரண தரத்திலும் உயர்தரத்திலும் ஊடகக் கல்வியைத் தெரிவுசெய்துள்ள தமிழ் சிங்கள மொழிமூல மாணவர்களின் நலன் கருதி, பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின், கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அமைச்சு, இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதோடு, இது தொடர்பிவான வர்த்தமானி அறிவித்தல், கடந்த வெள்ளிக்கிழமை (22) வெளியிடப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
சப்ரகமுவ மாகாணத்தில் 1,125 அரச பாடசாலைகள் இயங்குவதோடு, அவற்றில் பெரும்பாலானவைகள் கஷ்ட மற்றும் அதிகஷ்டப் பாடசாலைகள் எனவும், அந்த பாடாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால், ஆசிரியர் பற்றாக்குறை மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறதென, அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment
Post a Comment