ஜூலை மாதம் ,சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயற்திட்டம்




நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக "ஜன பவுர" எனும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. 

எல்லா பிரதேசங்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் குழு ஒன்றை நியமித்து, அவர்களின் ஊடாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிந்து, அவற்றிக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். 

அதனடிப்படையில் இதன் முதல் கட்ட நடவடிக்ககைகள் 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் நடைபெற இருந்ததுடன், தவிர்க்க முடியாத காரணத்தால் அது ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்களை பாதுகாக்க சமூகத்தின் பூரண ஒத்துழைப்பை பெறுவதும் இதன் ஒரு நோக்கமாகும்