பொசன் தினத்தை முன்னிட்டு தான நிகழ்வு




(க.கிஷாந்தன்)
பொசன் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் விஷேடமாக தன்சல் (தானம் வழங்கல்) நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அந்தவகையில், மலையகத்தில் அட்டனில் ஞாயிறு சந்தை இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 27.06.2018 அன்று பொசன் தினத்தை முன்னிட்டு சோறு தன்சல் இடம்பெற்றது.
இது, ஞாயிறு சந்தை இளைஞர் சங்கத்தின் தொடர்ச்சியாக நடத்தி வரும் தன்சல் நிகழ்வில் 4வது முறையாக ஏற்பாடு செய்திருக்கும் தன்சல் நிகழ்வாகும்.


இதில் அட்டன் பிரதேச வர்த்தகர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.