அஞ்சலிடலாம்




தாங்கள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி, இன்று (27) முதல் வழமை போல சேவைக்கு சமூகமளிப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், இருப்பினும் சில விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தபால் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்தக பண்டார தெரிவித்துள்ளார். 

தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமுடன் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொடர்ந்து 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த, இந்த வேலை நிறுத்த போராட்டம் நள்ளிரவு முதல் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.