சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமையில்லை




பாதாள உலக குழு உறுப்பினர்களை பொலிஸார் சுட்டுக்கொலை செய்வதனை தன்னால் அனுமதிக்க முடியாது என சட்டத்தரணி பிரேமனாத் சீ. தொலவத்த தெரிவித்துள்ளார். 

நேற்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதாக அழைத்து சென்ற ஒருவரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பாதாள உலகு குழு உறுப்பினர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார். 

சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமையில்லை எனவும் ஹிட்லருடைய ஆட்சி இந்த அரசாங்கத்தில் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.