கண்டியில் புத்தக கண்காட்சி




இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கண்டி புத்தக கண்காட்சி-2018″ நாளை (27.06.2018) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி (01.07.2018) வரை கண்டி சிடி செண்டர் நிலையத்தில் தினமும் மு.ப 9.00 மணி முதல் பி.ப 7.00 மணி வரை நடைபெறவுள்ளன.
இப்புத்தக கண்காட்சியில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழி புத்தக வெளியீட்டாளர்களும் கலந்து கொள்வதுடன் இதில் பலவகையான புத்தகங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பதுடன் கொள்வனவு செய்யும் புத்தகங்களுக்கு விலைக்களிவும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
இப்புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அனைவரும் வருகை தந்து தமக்கு மற்றும் தமது நண்பர்கள், உறவினர்களுக்கு அவசியமான அரிதான புத்தகங்களை கொள்வனவு செய்யதுகொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றன.(அ)
-ராபி சிஹாப்தீன்-