(பாறுக் ஷிஹான்)
சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக நேற்று (25) மாலை மீட்கப்பட்டுள்ளார்.
சுழிபுரம் பாண்டாவெட்டை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் றெஜினா (வயது -6) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டதுடன் சடலம் காணப்பட்ட இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயப் பொருள்களை மீட்டனர்.
மேலும் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அச்சிறுமி துன்புறுத்தலின் பின் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டே கிணற்றில் போடப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும் நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் மாணவியின் தோடும் களவாடப்பட்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும் என தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த நான்கு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போன குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் வேலையின் நிமித்தம் {கூலி வேலை} வெளியே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவ இடத்தில் நேரடி விசாரணைகள் மேற்கொண்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா சிறுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை 7 ஆண்டுகளுக்கு முன்னர் அதே இடத்தைச் சேர்ந்த 8 வயது மாணவியும் இவ்வாறு கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவி குறித்து பாடசாலை ஆசிரியர் கருத்து பாடசாலை அதிபர்
எப்போதும் துடிப்புடன் பறந்து திரிந்த இந்த அழகிய சிட்டு குருவியின் ஆயுள் முடிக்கப்பட்டது.எமது பாடசாலையில் சடலமாக மிட்கப்பட்ட இந்நாளில் தான் காலை இச்சிறுமி பாடசாலையில் நற்சிந்தனை சொன்னாள்.
துடிப்பானவள். நல்லா படிப்பாள். எப்போதும் இவள் சுத்தமான ஆடை அணிந்து வருவாள். அனைத்து ஆசிரியர்களுக்கும் இவளில் ஒரு கண் இருந்தது. இப்படிச் சொல்லிக் கலங்குகிறார் இவளது வகுப்பாசிரியை சம்பவத்தைக் கேள்விப்பட்டு இடிந்துபோனார்.
இவளை நல்லவளாக உருவாக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர் 10 கிலோமீற்றர் தூரத்தில் – சங்கானையில் உள்ள பட்டர்பிளை முன்பள்ளியில் சேர்த்தனர். அங்கும் இவள் சுட்டித்தனம்..இவளது எதிர்காலம் சிறப்பானதாக மாறும் என தாங்கள் நம்பியிருந்தனர் என இவளைக் கற்பித்த ரியூசன் ஆசிரியைகள் கூறுகின்றனர்.வீட்டில் இவள் கடைக்குட்டி.பெற்றோர் எத்தகைய அன்பு பாசம் வைத்திருந்தனர் என்பதை அவர்கள் படுகின்ற வேதனை.. அவர்களின் கதறல் வெளிக்காட்டுகின்றது.
Post a Comment
Post a Comment