மும்பையில் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்த விமானம் - 5 பேர் பலி




மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.