தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். அவை உருங்குலைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHtD9NzVaWqB7zEYEK2mDkSaSFzce7VvxWKGr-MCp8gl3tcl8_2kP_GeiP7YeWcvvlnFt8kp2bbFxaPQKCPheYqdYhvRjH0xobT3XbyYZKtmcaE-N2rO1xHBwSNX5Fcx0veP_22w6v0fiQf1AWBlQuFEvpbtfZ9MzDq8aVq781B-aDw7R4x4hQflCZYz4/s1600/yout.png)
Post a Comment
Post a Comment