செய்ண்ட் லூசியா:
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் பெரேரா, மஹேலா உடாவாட்டே ஆகியோர் களமிறங்கினர். உடாவாட்டே டக்-அவுட் ஆனார். அதன்பின் தனஞ்ஜெயா டி சில்வா களமிறங்கினார். அவரும் நிலைத்து நிற்காமல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பெரேரா உடன், குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201806150458511975_1_DfrKw_tWAAAjNL3._L_styvpf.jpg)
குசால் பெரேரா 55 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் தினேஷ் சந்திமால் களமிறங்கினார். குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்தவர்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சந்திமால் மற்றும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சந்திமால் 186 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201806150458511975_2_DfrxRs6X0AEFo6D._L_styvpf.jpg)
இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வெய்ட், டெவான் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஓவர்களில் 2 ரன்கள் எடுத்துள்ளது. #WIvSL #SLvWI
Post a Comment
Post a Comment