விசேட சுற்றிவளைப்புகளில் 2322 பேர் கைது




நாடுபூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களை மையபடுத்தி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 423 பேர் உள்ளிட்ட 2322 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, நேற்று இரவு 10 மணித் தொடக்கம் 12 மணிவரையும், இன்று அதிகாலை 3 மணித்தொடக்கம் 5 மணிவரையும் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 14,070 பொலிஸார் சுற்றிவளைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தரெனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது மதுபானம் அருந்திய நிலையில், 650 சாரதிகளும், பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 635 சந்தேகநபர்களும், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களை தம் வசம் வைத்திருந்த 531 பேரும், அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த 78 பேரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.