ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் மாநாடு 2018




ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான உலகளாவியக் கருத்தாடல் மற்றும் ஆய்வுத் தளமாக அமையவுள்ளஇ ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் குறித்த உலகளாவிய மாநாடு,  "உலகளாவிய ஊடகம் - 2018" என்ற தலைப்பில், எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில், கொழும்பில் நடைபெறவுள்ளது.
அறிவியல் முகாமைத்துவம் தொடர்பிலான சர்வதேசக் கல்வி நிறுவனம், டாக்கா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் வளாகம், பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேசப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டுக்கு, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தமிழ் மிரரும் டெய்லி மிரரும் அச்சு ஊடகப் பங்களிப்பை வழங்குகின்றன.
மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரும், அப்பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையின் தலைவருமான றொபேர்ட் ஹஸன், ஹொங்கொங்கில் அமைந்துள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல்துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜோசப் எம். சான், இலண்டன் பல்கலைக்கழகத்தின்இ ஊடகத்துறை மற்றும் சமூகவியில் வளாகத்தின் பேராசிரியர் மைக்கல் ப்ரொம்லே ஆகியோர் இந்த மாநாட்டுக்குத் தலைமைதாங்க உள்ளனர்.
இம்மாநாட்டில், "ஊடகங்களின் பிழைத்தல்: போக்குகளும் நம்பகத்தன்மையும்" என்ற தலைப்பில், ஊடகங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் அவற்றைத் தாண்டி எவ்வாறு ஊடகங்கள் சிறப்பான பணியை ஆற்ற முடியும் என்பது தொடர்பாகவும், கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.