பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை இணைக்கும் அக்பர் பாலத்தின் கீழ் இருந்த 20 குளவி கூடுகள், 6 மணித்தியாளங்கள் போராட்டத்துக்குப் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
20 பேர் கொண்ட குழு ஒன்று அண்மையில் அக்பர் பாலத்தின் கீழ் இருந்த குளவிகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தது.
இந்த குழுவில் இருந்த 13 வயது சிறுமி, குளவி கூடுகளை துணிச்சலாக அகற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாநாம கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த அலோகா என்கிற சிறுமியே இந்த துணிகர செயலலில் ஈடுப்பட்டுள்ளார்.
அலோகா தனது தந்தையுடன் இணைந்து குளவி கூடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவது தனக்கு பிடித்தமான ஒன்று எனவும் தெரிவித்தார்.
மஹாவெலி ஆற்றிலிருந்து 300 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அக்பர் பாலத்தின் கீழ் இருந்து குளவி கூடுகள் வெகுநாட்களாக அகற்றப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கதது.
Post a Comment
Post a Comment