ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்கத் தீர்மானித்துள்ளதால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை 30 ஆகக் குறையவுள்ளது. அத்துடன், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆக வரையறுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐயும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஐயும் விஞ்சுதலாகாது என்று மேற்படி சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசொன்று அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30இலிருந்து 45 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கையை 40இலிருந்து 45 ஆகவும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் அதிகரித்துக்கொள்ளமுடியும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இதற்கமையவே தேசிய அரசை அமைக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்குரிய அங்கீகாரத்தைப் பிரதமர் பெற்றிருந்தார். கூட்டரசு அமைப்பதற்காக இரு பிரதான கட்சிகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கையும் குறைவடையவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அமைச்சுகள் பகிரப்படவுள்ளன. எனவே, தனியாட்சி அமைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றமும் இடம்பெறவுள்ளது.
Post a Comment
Post a Comment