பெல்லன்வில விமலரத்தன தேரரின் தகனக்கிரியைகள்




பௌத்த சமயத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்காற்றிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தன தேரரின் தகனக்கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றன.
பூரண அரச அனுசரணையில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற தகனக் கிரியைகளில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் சமயப் பணியாற்றிய. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தன தேரர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (03) காலமானார்.
தேரருக்கு இறுதியஞ்சலி செலுத்துவதற்காக இன்று பகல் வரை பெருந்திரளானவர்கள் பெல்லன்வில விஹாரைக்கு சென்றிருந்தனர்.
பின்னர் தேரரின் பூதவுடல் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விளையாட்டரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரரின் தலைமையில் சமய அனுஷ்டானங்கள் நிகழ்த்தப்பட்டன.
சர்வமதத் தலைவர்களும் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டிருந்தனர்.